தருமன் என்ன சொல்லியிருக்கலாம்?

ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசை, கொஞ்ச நாளா படிக்கிறேன். அதுவும் பிரயாகை முதல்தான். துரியோதனன் மனம் மாறும், வெறுப்பு கொள்ளும் தருணங்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஒரு திக்திக் தொடரை படிப்பது போலவே உள்ளது. அதோடு, ஏன் பாண்டவர்கள் இப்படி செய்கிறார்கள் என மனம் பதை பதைக்கிறது. தெரிந்த கதை என்றாலும், ஜெயமோகன் புதிதாக உருவாக்கும் தருணங்களும் காட்சிகளும் அற்புதம்.

http://venmurasu.in/2014/11/23/

இதில், துரியோதனன் தருமனிடம் உதவி கேட்டு அது மறுக்கபடுவதை விட, ஒரு கருத்தை தனி மனித தாக்குதலாக தருமன் சொல்வதுதான் விரிசலை பெரிதாக்குகிறது. 

துரியோதனன் மேலும் முன்னகர்ந்து கைகளைக் கூப்பி “பட்டத்து இளவரசே, நான் உங்களிடம் சரண் அடைகிறேன். எனக்கு நூறு வீரர்களையாவது அளியுங்கள்… வெறும் நூறு வில்லாளிகளை” என்றான். தருமன் “தார்த்தராஷ்டிரா, நீ இந்நாட்டை ஆளும் அரசரின் மைந்தன். பத்துபேருடன் நீ சென்றாலும் அது அஸ்தினபுரியின் படையெடுப்பெனவே கொள்ளப்படும்… அதன் விளைவுகள் அஸ்தினபுரியை அழிக்கும். உன் உணர்ச்சிகளுக்கு அப்பால் சென்று இந்நகரின் பல்லாயிரம் குடிமக்களை எண்ணிப்பார்” என்றான். “உன் உடன்பிறந்தோர் உன் சொல்லுக்குரியவர்கள். ஆனால் அஸ்தினபுரியின் கொடியை நீ கொண்டுசெல்லலாகாது.”
தருமனின் வாதத்தால் நிறைவடைந்தவனாக அர்ஜுனன் திரும்பி துரியோதனனிடம் அவனை அமைதிப்படுத்த ஏதோ சொல்ல கை எடுத்தான். ஆனால் தருமன் தொடர்ந்து “உன் சொற்கள் அஸ்தினபுரியின் வாக்குறுதி அல்ல என்று கணிகர் சொன்னார் அல்லவா? அது யாதவர்களுக்கும் தெரிந்திருக்கும். அவர்கள் அதை கருத்தில்கொள்ள மாட்டார்கள்” என்றதும் திகைத்து கை அப்படியே நிற்க துரியோதனனை நோக்கினான். பாம்பை மிதித்தவன் போல துரியோதனன் உடலில் ஒரு அதிர்வு கடந்து சென்றது. முகம் உருகிவிடுவது போல வெம்மை கொண்டது. வாய் ஏதோ சொல்லவருவது போல இருமுறை அசைந்தது. பின் அவன் அம்புபட்ட காட்டுயானை போல வெளியே பாய்ந்துசென்றான்.

தருமம் என்பது சரியானவற்றை செய்வது மட்டுமல்ல, சரியானவற்றை சொல்வதும், சொல்லும் விதமும் தான். மனம், வாக்கு, செயல் - மூன்றும் முக்கியம். இங்கே முதலில் பேசியதோடு நின்றிருக்கலாம். இரண்டாவது கருத்து, வேறோருவர் சொன்னதாயினும், அதை திரும்ப சொல்வதால், அதுவும் தருமன் கருத்தாகவே கொள்ள வாய்ப்புகள் அதிகம். 

அந்த குழப்பம் தவிர்க்கவே டிவிட்டரில் பலர் - Re-tweets are not endorsements , என போட்டுக்கொள்கிறார்கள் போலும்.

சரி தருமனுக்கும், கிருஷ்ணனுக்கும் தருமத்தை கடைபிடிப்பதில் என்ன வித்தியாசம்? While Krishna is famous for upholding dharma, Yudhistra is not famous, in fact has negative publicity. !!

http://venmurasu.in/2014/11/26 


இந்த அத்தியாயத்தில், துரியோதனன் கேட்டதையே, கிருஷ்ணன், குந்தியிடம் கேட்டு பெற்றுவிடுகிறான். தருமன் திகைக்கிறான். தருமன் ஏன் மறுக்கவில்லை? இது குந்தியின் ஆணை, தருமனுடையது அல்ல. இதை துரியோதனன் தரப்பு, தருமனின் ஆணையாகத்தான் பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

Perceptions are an intricate web. Understanding and negotiating such a web is an arduous task. Every time we try to be objective, we are not only failing at it but adding more to the web. 

Comments

Popular posts from this blog

Why the name anandh 360....

இலக்கியம் என்றால்?

வலம் மாத இதழ்: புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? - ...