தருமன் என்ன சொல்லியிருக்கலாம்?
ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசை, கொஞ்ச நாளா படிக்கிறேன். அதுவும் பிரயாகை முதல்தான். துரியோதனன் மனம் மாறும், வெறுப்பு கொள்ளும் தருணங்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஒரு திக்திக் தொடரை படிப்பது போலவே உள்ளது. அதோடு, ஏன் பாண்டவர்கள் இப்படி செய்கிறார்கள் என மனம் பதை பதைக்கிறது. தெரிந்த கதை என்றாலும், ஜெயமோகன் புதிதாக உருவாக்கும் தருணங்களும் காட்சிகளும் அற்புதம். http://venmurasu.in/2014/11/23/ இதில், துரியோதனன் தருமனிடம் உதவி கேட்டு அது மறுக்கபடுவதை விட, ஒரு கருத்தை தனி மனித தாக்குதலாக தருமன் சொல்வதுதான் விரிசலை பெரிதாக்குகிறது. துரியோதனன் மேலும் முன்னகர்ந்து கைகளைக் கூப்பி “பட்டத்து இளவரசே, நான் உங்களிடம் சரண் அடைகிறேன். எனக்கு நூறு வீரர்களையாவது அளியுங்கள்… வெறும் நூறு வில்லாளிகளை” என்றான். தருமன் “தார்த்தராஷ்டிரா, நீ இந்நாட்டை ஆளும் அரசரின் மைந்தன். பத்துபேருடன் நீ சென்றாலும் அது அஸ்தினபுரியின் படையெடுப்பெனவே கொள்ளப்படும்… அதன் விளைவுகள் அஸ்தினபுரியை அழிக்கும். உன் உணர்ச்சிகளுக்கு அப்பால் சென்று இந்நகரின் பல்லாயிரம் குடிமக்களை எண்ணிப்பார்” என்றான். “உன் உடன்பிறந்தோர் உன் சொல...